வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலான கிறிஸ்துவின் பிறப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் இயேசுகிறிஸ்து மனிதனாக பிறந்தார். அவர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது பிறப்பு பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகவே இயேசு இப்பூமிக்கு வந்தார். நம் எல்லாருடைய பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தி மரிக்கும்படியாகவே இவ்வுலகிற்கு வந்தார். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது என்று வேதம் கூறுகிறது. மேலும் காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. எனவேதான் இயேசு தம்முடைய பரிசுத்த இரத்தத்தை நமக்காகச் சிந்த சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார். மரித்த கிறிஸ்து மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தார். வானங்கள் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவகுமாரன் மீண்டும் பூமிக்கு வருவார். இதையும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் சேர இயேசுவை நோக்கிக் கூப்பிடுவோம். இறைவன் இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய சமாதானத்தை தந்து, நம்மை ஆசீர்வதிப்பார். அன்று இரட்சகராக வந்தவர் நியாயாதிபதியாக சீக்கிரமாய் வரப் போகிறார். அவரைச் சந்திக்க ஆயத்தப்படுவோமா!


Comments
Post a Comment